மெடிக்கல் நியூஸை எந்த அளவுக்கு நம்பலாம்?
இந்த கேள்வி நம் எல்லோருக்குமே தோன்றக் கூடியது. பதில்தான் தெரியாது.
ஏன் என்றால், இது இப்படி என்று ஒரு ஆய்வு தெரிவிப்பதாக செய்தி வெளியாகும். இல்லை, அது அப்படி இல்லை; இப்படித்தான் என்று மற்றொரு ஆய்வு தெரிவிப்பதாக சில மணி நேரத்தில் இன்னொரு செய்தி வெளியாகும்.
இரண்டில் எதை நம்புவது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். முடிந்தவரை லாஜிக்கை பயன்படுத்தினாலே நல்ல முடிவுக்கு வர முடியும். லாஜிக் என்பதை காமன் சென்ஸ் என்றும் சொல்லலாம். இது சாத்தியம், இது சாத்தியம் அல்ல; இது சரி என்று படுகிறது, இது தவறு என தோன்றுகிறது என்று ஒவ்வொரு விஷயத்திலும் நமது உள்மனம் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
பல நேரங்களில் மூளை சொல்வதை காட்டிலும் மனம் சொல்வது சரியாகவே இருக்கும். நீங்களே அனுபவத்தில் இதை உணர்ந்து இருப்பீர்கள்.
இதை இப்பொது சொல்ல என்ன அவசியம் என்றால், இன்று ஒரே நாளில் ரெட் மீட் பற்றிய இரண்டு வெவ்வேறான ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. கொழுப்பு மிகுந்த ஆட்டுக்கறி, மாட்டுக்கறி போன்றவை ரெட் மீட் லிஸ்டில் வரும் என்பது தெரியும்தானே.
இரு செய்திகள் குறித்தும் நாளை பார்ப்போம்.